Menu

December 14, 2018
Pondy 10:37 AM +28°C

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் விழிப்புணர்வு மணற்சிற்பம்

புதுச்சேரி அரசு மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில், கடற்கரை காந்தி சிலை அருகில் ‘மருந்தின்றி இவ்வுலகம் இல்லை’ என்ற விழிப்புணர்வு மணற்சிற்பத்தை, முதல்வர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார்.

 

உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு, மாநில மருந்தாளுநர் கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

நேற்று மாலை, புதுச்சேரி கடற்கரை காந்திசிலை அருகே, மருந்தாளுநர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மணற் சிற்பம் வடிவமைத்திருந்தனர்.

 

நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன் தலைமையேற்று, மதர் தெரேசா மருந்தியல் கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 

அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

 

மாநில மருந்தாளுனர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அன்புசெல்வன் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி மணற் சிற்பத்தை திறந்து வைத்தார். சபாநாயகர் வைத்தியலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.

 

சிற்ப கலைஞர்கள் கவுதம், ரேவன்ராஜ், சுபாஷ் ஆகியோர் விழிப்புணர்வு மணற் சிற்பத்தை வடிவமைத்திருந்தனர்.

 

மதர் தெரேசா கல்லுாரி டீன் டாக்டர் ஜெயந்தி, மருந்தியல் கல்லுாரி முதல்வர் டாக்டர் கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உதவி பேராசிரியர் நுாரூல் ஆலம் தலைமையில் மருந்தியல் கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

 

சங்க பொதுச்செயலாளர் பிரபாத் நன்றி கூறினார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon