Menu

December 14, 2018
Pondy 10:25 AM +28°C

நகைக்காக கர்ப்பிணிப்பெண் படுகொலை – போலிச்சாமியார் கொடூரம்

திருமணம் தள்ளிப்போன அசோக்கின் தங்கை திலகத்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று கோவிந்தராஜ் சிறப்புப் பூஜைகள் செய்ததாகவும் அதன் பின்னர் அவருக்கு வரன் அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கோவிந்தராஜை அந்தக் குடும்பம் முழுமையாக நம்பியிருக்கிறது.

 

திலகத்தின் திருமணத்துக்காக வாங்கப்பட்ட 5 சவரன் நகையைப் பறிக்க முடிவு செய்த கோவிந்தராஜ், அசோக்கின் மனைவி கிருஷ்ணவேணியிடம், அவரது குடும்பத்தில் விரைவில் பிரச்சனை ஏற்படுமென மிரட்டினான்.

 

கிருஷ்ணவேணியை விட்டு, விட்டு அசோக் பிரிந்து சென்று விடுவார் என்று கூறிய கோவிந்த ராஜ், இதற்காக நகைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி அவற்றை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் செங்கண் ஓடை பகுதியில் உள்ள காளி கோவிலுக்கு வருமாறு கிருஷ்ணவேணியிடம் கூறினான்.

 

கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு நகைகளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணவேணி அங்கு சென்றுள்ளார். நகையை வாங்கிக்கொண்டு கிருஷ்ணவேணியைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, அவரது இரு கைகளையும் துணியால் கட்டிவிட்டு, தான் சொல்லும் மந்திரங்களை கண்ணை மூடிக்கொண்டு திருப்பிச் சொல்லுமாறு கோவிந்தராஜ் கூறியுள்ளான்.

 

கண்களை மூடியவாறு மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்த கிருஷ்ணவேணியை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலை செய்த கோவிந்தராஜ், 5 சவரன் நகைகளுடன் அவர் கழுத்து மற்றும் காதில் இருந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு ஒன்றும் நடக்காதது போல் வீட்டுக்கு வந்துள்ளான்.

 

கிருஷ்ணவேணியைக் காணாமல் அவரது வீட்டார் தேடிய நிலையில், அவர்களுடன் சேர்ந்து தானும் தேடுவதுபோல் நடித்துள்ளான் கோவிந்தராஜ்.

 

ஒவ்வொரு நாளும் போலிச் சாமியார்கள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தாலும் கோவிந்தராஜ் போன்றோரை கண்மூடித்தனமாக நம்பும் கூட்டம் இன்னும் இருப்பது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon