Menu

புதுப்பொலிவுடன் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகம் திறப்புவிழா

நான்கு லட்சம் நுால்களுடன், ஒரு ஆண்டிற்கு பிறகு, நவீன வசதிகளுடன் திறக்கப்பட தயாராகி விட்டது, புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகம்.

 

கவர்னர் மாளிகை அருகில் உள்ள ரோமன் ரோலண்ட் நுாலகத்தை புதுப்பிக்கும் பணிக்காக, கொல்கத்தாவில் இயங்கும் தேசிய நுாலக இயக்ககம், ராஜாராம் மோகன்ராய் பவுண்டேஷன் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாயை வழங்கியது.

 

இதில், கட்டடத்தை சீரமைத்தல், தரைகளில் டைல்ஸ் பதித்தல், இ.புக்ஸ் நுாலகத்திற்கான 9 கணினி, பார்வை திறன் குறைபாடு கொண்டவர்களுக்கு பிரய்லி நுாலகம், நுால் திருட்டை தடுக்கும் பார்கோடிங் சிஸ்டம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

 

ஒயரிங் பணிகளுக்காக புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில், 64 லட்சம் ரூபாய் மற்றும் நுாலகம் முழுவதும் சென்ட்ரலைஸ்ட் ஏ.சி பொருத்துவதற்கு கூடுதலாக 28 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

 

அதையொட்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதுப்பிக்கும் பணிக்காக நுாலகம் மூடப்பட்டது. சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்தன.

 

ஆனால் நுாலகத்தில் மத்திய குளிர்சாதன வசதி பொருத்துவதில் ஏற்பட்ட குழப்பம், குளறுபடிகள் காரணமாக, அப்பணி ஆமை வேகத்தில் நடந்து வந்தது.

 

இந்நிலையில் நுாலகத்தை விரைந்து திறக்க கலைப்பண்பாட்டு துறை இயக்குனர் கணேசன் எடுத்த முயற்சியையொட்டி, பணிகள் வேகம் பெற்று சீரமைப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

 

இதில் தரை தளத்தில் ஏசி பணிகள் மட்டும் தற்போது நடந்து வருகிறது. இப்பணியும் இந்த மாதம் இறுதியில் முடிந்து நுாலகம் திறப்பதற்கு தயாராகி விடும்.

 

திறப்பு விழா நெருங்கி விட்டதால் நுாலகத்தில் படிக்கும் வாசகர்களுக்கு புதிய இருக்கை,டேபிள்கள் வந்து விட்டது.

 

மேலும் முதல் தளத்தில் உள்ள மர அலமாரிகளில் நுால்களை அடுக்கும் பணியில் கடந்த 15 நாட்களாக, நுாலகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பொதுபொலியுடன் நுாலகம் திறப்பு விழா காண உள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply