Menu

September 19, 2018
Pondy 22:08 PM +27°C

புதுச்சேரி பேன்ஸி வாகன பதிவு எண்கள் இணையதளத்தில் ஏலம்

புதுச்சேரிபோக்குவரத்துத் துறையில், பேன்ஸி வாகன பதிவு எண்கள், இணையதளத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

 

இதுகுறித்து, போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பேன்ஸி வாகன பதிவு எண்கள் PY-05 F (உழவர்கரை) https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில், இன்று (12ம் தேதி) காலை 10:00 மணி முதல், வரும் 21ம் தேதி மாலை 4:30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது.

 

இந்த ஏலத்தில் பங்கு பெறுவதற்கு தேவையான பெயர் (யூசர் நேம்) மற்றும் பாஸ்வேர்டை https://parivahan.gov.in/fancy என்ற இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசர்’ மூலமாக, இன்று 12ம் தேதி முதல், வரும் 18ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

 

பதிவு செய்யப்பட்ட பெயர் மற்றும் பாஸ்வேர்டை வைத்து, ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களுக்கான பதிவை செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்தவர்கள் மட்டுமே, வரும் 19ம் தேதி காலை 10:00 மணி முதல், 21ம் தேதி மாலை 4:30 மணி வரை ஏலத்தில் பங்கு பெறலாம்.

 

இந்த இ-ஆக் ஷன் முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள், அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனைகளை, https://transport.py.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும், மற்றும் பதிவு இறக்கமும் செய்து கொள்ளலாம்.

 

விண்ணப்ப தொகை, இ.எம்.டி., ஏல நிபந்தனைகள் குறித்த விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் போக்குவரத்து துறை அலுவலகத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

 

இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் ஆன் லைன் பேமண்ட் மூலம் இணையதளம் வாயிலாக மட்டும் பெறப்படும்.

 

நேரிலோ, காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon