Menu

September 19, 2018
Pondy 21:53 PM +27°C

புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் வேலை நிறுத்தம்

புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவார கட்டமைப்பை, மறு சீரமைக்க கோரி, மீன்பிடி விசைப்படகுகள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளன.

 

தேங்காய்த்திட்டில் மீன்பிடி துறைமுகம் மூலம், 18 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்படி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

துறைமுகத்தில் 135 மீன்பிடி விசைப்படகுகளும், 100 கன்னா படகுகளும், 150க்கும் மேற்பட்ட சிறிய படகுகளும் உள்ளன.

 

சரியான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம், ஒவ்வொரு ஆண்டும் மண் மூடி துார்ந்து விடுகிறது. ஆண்டு தோறும் டிரஜிங் மூலம் துார்வாரும் பணி நடக்கிறது.

 

இதற்கு, நிரந்தர தீர்வாக துறைமுக திட்டத்திற்காக, முகத்துவாரத்தை துார் வாரும் பணி நடந்து வருகிறது. ஆனாலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு முகத்துவாரம் துார்ந்து விட்டது. படகுகள் மண் திட்டில் சிக்கி சேதமடைந்தது.

 

இதை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் முகத்துவாரத்தில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஆனால் முழுமையாக முகத்துவாரம் துார்வாரப்படவில்லை.

 

இதை கண்டித்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டம் தேங்காய்த்திட்டில் நடந்தது. கூட்டத்தில் முகத்துவாரம் துார்ந்து விடுவதிற்கு, தவறான முகத்துவார அமைப்பே காரணம்.

 

தமிழகத்தில் உள்ளது போல், சரியான முறையில் முகத்துவார அமைப்பை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும். முகத்துவாரத்தை மறு கட்டமைப்பு செய்யும் வரை, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

 

மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களின் போராட்டத்தால், புதுச்சேரி வந்த கேரள மீன் வியாபாரிகள் கடலுார் உள்ளிட்ட பகுதிக்கு சென்றனர்.

 

மீன்பிடி படகுகள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரண மாக, தினசரி 1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon