Menu

September 19, 2018
Pondy 21:56 PM +27°C

பெட்ரோல் , டீசல் உயர்வு குறித்து பங்க் ஊழியர்களிடம் முதல்வர் விசாரனை

கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் நாராயணசாமி, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேட்டறிந்தார்.

 

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., சார்பில் இன்று (10ம் தேதி) பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சிகள், தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன.

 

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்., சார்பிலேயே பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பஸ், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல்வர் நாராயணசாமி நேற்று காலை 6 மணிக்கு வாக்கிங் சென்றார். கடற்கரை சாலை சீகல்ஸ் ஓட்டல் அருகே வந்தபோது அங்குள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பங்கு ஊழியர்களிடம் பெட்ரோல் விலை நிலவரம் குறித்தும், இம்மாதத்தில் எத்தனை தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது என்று கேட்டார்.

 

பின் முதல்வர் நாராயணசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில், ”பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியன் மூலம் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

விலைவாசியும், பணவீக்கமும் அதிகரித்து இருக்கும்போது மக்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும். கடந்த நான்கு ஆண்டுகளில் 11 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

 

இது எங்கே போயிற்று? இது பகல் கொள்ளை. தேசிய ஜனநாயக கூட்டணியை வீட்டிற்கு அனுப்பும் நாள் நெருங்கி விட்டது” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon