Menu

September 19, 2018
Pondy 22:45 PM +26°C

7 பேர் விடுதலை குறித்து காங்கிரசார் மாறுபட்ட கருத்து

7 விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் நாரயணசாமியும், திருநாவுக்கரசரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

 

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இன்று தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது.

 

அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்து தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

 

இது குறித்து பாண்டிச்சேரியின் முதலமைச்சர் நாரயணசாமி கூறும்போது, “7 பேர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது.

 

காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக எனக்கு இதில் மனமில்லை. ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதை ஏற்பதால் நானும் ஏற்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இதுகுறித்து கூறும்போது, “சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். இறக்கம், கருணை தேவை தான். ஆனால், இவர்களை விடுவித்தால் எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon