Menu

November 18, 2018
Pondy 09:45 AM +29°C

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதல்வர் நாராயணசாமி கண்டனம்

நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

 

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த விண்ணை முட்டும் விலையேற்றம் மத்திய அரசால் அனைத்து தரப்பு மக்களின் மீதும் கடுமையாக திணிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விலையேற்றம் பால், காய்கறி என அன்றாடத் தேவைக்கான பொருட்கள் முதல் அனைத்து பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது.

 

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை உயராதபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை தினந்தோறும் உயர்த்துவது நியாயமற்றது.

 

இதனால், பொது மக்கள் துயரத்திற்கும் கடும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி உள்ளனர். மதச்சார்பற்ற கூட்டணி அரசின் ஆட்சியின் போது, வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் உள்நாட்டுபோர் ஆகியவற்றின் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தபோதும்,

 

பொது மக்களின் பொருளாதார சுமையினை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது.

 

பொது மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வுக்கு கடுமையாக கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், விலையேற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon