Menu

November 18, 2018
Pondy 09:03 AM +28°C

நல்லவாடு மீனவ கிராமத்தில் சுனாமி ஒத்திகை

புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தில், இன்று (5ம் தேதி), சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.

 

இது குறித்து கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

 

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ஹைதராபாத்தில் உள்ள இன்காய்ஸ் இணைந்து, இந்திய கடலோர மாநிலங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தில், இன்று (5ம் தேதி), சுனாமி எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த உள்ளது.

 

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட உள்ளனர்.

 

சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் காலங்களில், பொதுமக்கள், தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகள், நடைமுறைகள் குறித்த ஒத்திகை நிகழ்த்தப்பட உள்ளது.

 

நல்லவாடு கிராம மக்கள், ஒத்திகை நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இது வெறும் ஒத்திகை நிகழ்ச்சி என்பதால், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon