Menu

September 19, 2018
Pondy 22:16 PM +27°C

கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளிக்கு முதல்வர் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை

தேசிய அளவில் துாய்மைக்கான சிறந்த பள்ளிக்காக தேர்வு செய்யப்பட்ட, கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளிக்கு, முதல்வர் நாராயணசாமி ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.

 

மத்திய அரசு மூலம் ‘தேசிய துாய்மை பள்ளி விருதுகள்’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 52 பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், கூனிச்சம்பட்டு பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப் பள்ளி, இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.

 

இதனையடுத்து, முதல்வர் நாராயணசாமி நேற்று மதியம் இப்பள்ளிக்கு வருந்தார். கல்வித்துறை செயலர் அன்பரசு, இயக்குனர் குமார், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

 

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

 

விருது பெற்றமைக்காகவும், பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் காசோலையை, முதல்வர் நாராயணசாமி, பள்ளி பொறுப்பாசிரியர் சசிக்குமாரிடம் வழங்கினார்.

 

பின்னர், முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘இப்பள்ளி புதுச்சேரி மாநிலத்திலேயே எங்கு உள்ளது என்றே தெரியாமல் இருந்தது.

 

பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு காரணமாக இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில், தற்போது திகழ்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் 7 பள்ளிகள் தேர்வாகியுள்ளது பெருமைக்குரியது.

 

இப்பள்ளியின் ஆசிரியர்களும், ஊழியர்களுக்கும் அரசு சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon