Menu

November 18, 2018
Pondy 09:06 AM +28°C

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அசிட் வீச்சு!!

கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது காங்கிரஸ் தொண்டர்கள் மீது அமிலம் வீசப்பட்டதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

கடந்த 31-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை காங்கிரஸ் 982 இடங்களிலும் பா.ஜ.க. 929 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 375 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சைகள் 328 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தும்கூர் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் அமிலம் வீசியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக பொலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அமில வீச்சுக்கு பா.ஜ.க.வினர்தான் காரணம் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon