Menu

September 19, 2018
Pondy 23:06 PM +26°C

புதுச்சேரி கடற்கரை சாலை விரிவு செய்ய திட்டம்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் முன்னுரிமை வரைவு பட்டியல் ரெடியாகி விட்டதால், இனி அனைத்து பணிகளும் வேகமெடுக்க உள்ளன. முதற்கட்டமாக சுற்றுலா பயணிகள் குவியும் கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, புதுச்சேரி நகராட்சி மூன்றாம் கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, மூன்று ஸ்மார்ட் நகரங்களை நிறுவிட தொழில் வசதிகளை செய்து கொடுக்க இசைந்துள்ளது.

 

அத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிரான்ஸ் அரசு, பிரெஞ்சு வல்லுநர்களை புதுச்சேரிக்கு அனுப்பி, தொழில்நுட்ப அனுபவங்களை அளிக்க முன் வந்துள்ளது.

 

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்திட ‘நிப்பான கோயி’ என்ற திட்ட மேலாண்மை வல்லுநர் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக ஏற்கனவே இரண்டு கூட்டங்கள் நடத்தி முடிந்த சூழ்நிலையில், பிரெஞ்சு நாட்டு வல்லுநர்களுடன், இந்தியா- பிரெஞ்சு நகர மேம்பாடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி வார கலந்துரையாடல் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரை சாலையில் உள்ள பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தில் நடந்தது.

 

நிறைவு நாளான நேற்று தலைமை செயலர் அஸ்வனி குமார், ஸ்மார்ட் சிட்டி மிஷன் செயலர் ஜவகர், இயக்குனர் சவுத்ரி அபிஜித் விஜய், தலைமை பொறியாளர் தீனதயாளன், புதுச்சேரி நகராட்சி, துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

இந்த கலந்துரையாடலில் பெரிய வாய்க்கால் அழகுபடுத்துதல், வாகன நிறுத்த வசதி மேம்பாடு, புதுச்சேரி கடற்கரை சாலை விரிவாக்கம் போன்ற திட்டங்கள் விரைவாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 

இது மட்டுமின்றி புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் வரைவும் தயார் செய்யப்பட்டது.

 

கடற்கரை சாலை விரிவாக்கம்

 

சுற்றுலா பயணிகள் குவியும் புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய சாராய ஆலை முதல், டூப்ளே சிலை வரை 1.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கடற்கரை சாலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருபுறமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அத்தோடு அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon