Menu

அரவிந்த கண் மருத்துவமனையின் கண்தான விழிப்புணர்வு கண்காட்சி

அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், கண்தான விழிப்புணர்வு சிறப்பு கண்காட்சி, புதுச்சேரி கடற்கரை சாலையில் துவங்கியது.

 

கண்தான இருவார விழாவை முன்னிட்டு, அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு கண்காட்சி அரங்கு, கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.

 

கண்காட்சியை, மத்திய சுங்கத் துறை ஆணையர் நிரஞ்சன் துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர், ரோட்டரி எலைட் சங்கத்தின் தலைவர் புகழேந்தி, அரவிந்த் கண் மருத்துவமனையின் முதன்மை டாக்டர் வெங்கடேஷ், கண் வங்கி இயக்குனர் டாக்டர் சிவானந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

வரும் 8ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கண்காட்சியில், கண்தானம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் விளக்கம் அளிக்கின்றனர். கண் தானம் செய்ய விரும்புபவர்கள், இங்கு விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, பதிவு செய்து கொள்ளலாம்.

 

விழாவில் அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் காவேரி, டாக்டர் கிறிஸ்டி, எலைட் ரோட்டரி சங்கத்தின் சுந்தரவரதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கண்தான விழிப்புணர்வு கண்காட்சியில், ‘நான் கண்தானம் அளித்துள்ளேன்’ என்ற வாசகத்துடன், ‘செல்பி’ பிரியர்களுக்காக, சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

 

இங்கு, கண் விழியின் மத்தியில் நின்று, மொபைல் போனில் போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைதளங்களில் பதியவிடலாம்.

 

மேலும், கண்தானம் செய்ததற்காக, காந்தியிடம் விருது பெறுவதைபோல போட்டோ எடுத்துக் கொள்ளும் வகையில், காந்தியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. ‘கண்தானம் செய்வேன்’ என கையெழுத்திட்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply