Menu

September 19, 2018
Pondy 22:47 PM +26°C

கேரள வெள்ள நிவாரணத்திற்கு பரிசு தொகையை வழங்கிய புதுச்சேரி மாணவர்

பெத்திசெமினார் பள்ளி மாணவர், மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு போட்டியில் கிடைத்த பரிசு தொகையை, கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கினார்.

 

புதுச்சேரி, கதிர்காமம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு போட்டி நடந்தது.

 

இதில், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகி பகுதியை சேர்ந்த 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

இப் போட்டியில், புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் விதுார், மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.அவருக்கு, ரூ. 1000 பரிசுத் தொகை மற்றும்சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

பரிசு பெற்ற மாணவர் விதுாரை, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். மாணவர் விதுார், அக்., 5ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் அகில இந்திய போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

 

மாணவர் விதுார், தனக்கு கிடைத்த பரிசு தொகை, ஆயிரம் ரூபாயை, கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon