Menu

November 18, 2018
Pondy 08:55 AM +28°C

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் ‘ஸ்பந்தன்’ விழா

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடைபெறும் ‘ஸ்பந்தன்’ விழாவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, நேற்று மாணவர்கள் முகத்தில் வண்ண ஓவியங்களை வரைந்து அசத்தினர்.

 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சங்கம் சார்பில் ‘ஸ்பந்தன்’ கலைவிழாவை, கடந்த 27ம் தேதி ஜிப்மர் இயக்குனர் விவேகானந்தன், துவக்கி வைத்தார்.

 

ஏழு நாள் நடக்கும் கலைவிழாவில், கலாசாரம், இலக்கிய மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்தியாவில் உள்ள 70க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து மாணவ மாணவியர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

 

நேற்று, முகத்தில் ஓவியம் வரைதல், கையில் மெகந்தி போடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, கல்லுாரி மாணவ மாணவியர், முகத்தில் வண்ண ஓவியங்களை வரைந்து, திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

ஸ்பந்தன் விழாவையொட்டி, ஜிப்மர் அரங்கம் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று (30ம் தேதி) இரவு மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சி, கார்த்திக்கின் வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

 

மாணவ, மாணவிகளின் பேஷன் ஷோ, லிஸ்டர் ஹால் மைதானத்தில் வரும் 31ம் தேதி நடக்கிறது. 1ம் தேதி இரவு, ‘மெட்ராஸ் மெயில்’ குழுவினரின் பேண்டு வாத்திய நிகழ்ச்சி, ‘தைகூடம் பிரிஜி’ குழுவினரின் இசை கச்சேரியுடன் ஸ்பந்தன் விழா நிறைவு பெறுகிறது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon