Menu

November 18, 2018
Pondy 10:06 AM +29°C

உப்பனாறு வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

புதுச்சேரி உப்பனாறு வாய்க்காலில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 

மழைக்காலத்திற்கு முன் வாய்க்காலை துார்வார வேண்டும். புதுச்சேரி உப்பனாறு வாய்க்கால், ஜீவா நகரில் துவங்கி உப்பளம் வழியாக சென்று, கடலில் கலக்கிறது.

 

நகரின் பெரும்பாலன கழிவுநீர் வாய்க்கல்கள் உப்பனாறு வாய்க்காலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சைடு வாய்க்காலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், உப்பனாறு வாய்க்கால் வழியாக கடலில் கலக்கிறது.

இந்த வாய்க்காலில் பொதுமக்கள் வீசும் குப்பைகள், உப்பளம் அம்பேத்கர் நகர் சாலை சந்திப்பு பாலம் அருகே குவிந்து கிடக்கிறது.

 

இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் உப்பனாறு முழுவதும் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

 

கழிவுநீர் தேக்கத்தால், உப்பனாறு வாய்க்காலை ஒட்டியுள்ள வாணரப்பேட்டை, உப்பளம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon