Menu

November 18, 2018
Pondy 09:12 AM +28°C

காரைக்கால் பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியில் களமிறங்கிய அமைச்சர்

காரைக்கால் அம்பகரத்தூர் பகுதியில் வாய்க்கால் சரியாக தூர்வாரவில்லை என்று நேற்று அமைச்சர் கமலக்கண்ணன் களத்தில் இறங்கி வாய்க்காலில் உள்ள அடைப்புகளை தூர்வரும் பணியில் ஈடுபட்டார்.

 

காரைக்காலில் நெடுங்காடு, திருநள்ளார், கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயம் நடக்கிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு ரூ.45 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம், காலம் கடந்து தூர்வரும் பணியில் ஈடுபட்டது.

 

கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காரைக்காலுக்கு காவிரி தண்ணீர் வந்தது. இதனால் ஒரு சில இடங்களில் மட்டும் தூர்வாரப்பட்டது.

 

ஆறுகள்,வாய்க்கால் மற்றும் குளங்கள் சரிவர தூர்வாரப்படாத நிலையில் இந்த ஆண்டு காவிரி நீர் வந்தடைந்ததால், குளம் மற்றும் ஏரிகளில் அவற்றை நிரப்ப பலகட்ட நடவடிக்கைகளை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மேற்கொண்டு வருகிறார்.

அம்பகரத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் உள்ள அடைப்புகளை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று இறங்கி தூய்மைப்படுத்தினர். விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon