Menu

November 18, 2018
Pondy 09:56 AM +29°C

புதுச்சேரி கடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை, நாடு முழுவதும் உள்ள முக்கிய நீர்நிலைகளில் கரைக்க முடிவு செய்யப்பட்டது. அவருடைய அஸ்தி அனைத்து மாநில பா.ஜ., தலைவர்களிடம், டெல்லியில் வழங்கப்பட்டது.

 

புதுச்சேரி சார்பில், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் மற்றும் செயலாளர் அருள்முருகன் ஆகியோர் வாஜ்பாயின் அஸ்தியை, கடந்த 23ம் தேதி புதுச்சேரிக்கு கொண்டு வந்தனர்.

 

புதுச்சேரி முழுவதும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வாஜ்பாய் அஸ்தி கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

பின், வாஜ்பாயின் அஸ்தி, பா.ஜ., தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அஸ்திக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

 

பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி, முக்கிய சாலைகள் வழியாக நேற்று மவுன ஊர்வலமாக புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே கொண்டு செல்லப்பட்டது. அங்கு, அஸ்திக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதை தொடர்ந்து வேத பாராயணம் இசைக்கப்பட்டது.

 

தொடர்ந்து காந்தி திடலில் இருந்து வாஜ்பாயின் அஸ்தி ஊர்வலமாக, தலைமை செயலகம் அருகே கொண்டு செல்லப்பட்டது.

 

அங்கு கவர்னர் கிரண்பேடி முன்னிலையில் வாஜ்பாயின் அஸ்தி 12.20 மணிக்கு கடலில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon