Menu

September 19, 2018
Pondy 22:30 PM +27°C

புதுச்சேரி முதல்வர் தொகுதியில் சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியில் கலெக்டர் சவுத்திரி அபிஜித் விஜய் ஆய்வு நடத்தினார்.

 

பருவ மழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை முடுக்கி விட்டுள்ளது. மழை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரிக்கும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையில்முதல்வர் நாராயணசாமி தொகுதியான நெல்லித்தோப்பு பகுதியில், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்திரி அபிஜித் விஜய் நேற்று அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

 

நெல்லித்தோப்பு மார்க்கெட் வளாகத்தை பார்வையிட்ட அவர், துாய்மையாக உள்ளதா என ஆய்வு செய்தார். அப்போது சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருக்காவிட்டால் கொசு உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவும் என வியாபாரிகளிடம் எடுத்துரைத்தார்.

 

பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்துவியாபாரம செய்ய கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.

 

நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா, தேவையான மருந்துகள் கைவசம் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

 

புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சவுத்திரி அபிஜித் விஜய், முதல்வர் நாராயணசாமி தொகுதி யில் திடீர் ஆய்வு பரபரப்பை நடத்திய தால் ஏற்பட்டது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon