Menu

November 18, 2018
Pondy 10:03 AM +29°C

முதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக முன்னால் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கண்டனம்

முதல்வர் நாராயணசாமி அ.தி.மு.க., அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் கூறி உள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழக அரசு கால்வாய்களை துார்வாராததால் காரைக்கால் கடைமடைக்கு காவிரி நீர் வர தாமதம் ஏற்பட்டுள்ளது என, முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

 

தமிழகத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க.,வின் புதுச்சேரியின் செய்தி தொடர்பாளர் போல முதல்வர் நாராயணசாமி செயல்பட்டு வருகிறார். தனது பதவியை காப்பாற்ற தமிழக அரசை குறை கூறுவதன் மூலம் தி.மு.க.,வை சந்தோஷப்படுத்த முயல்கிறார்.

 

முதல்வர் தனது நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வாய்க்கால்களை மழைக் காலத்துக்கு முன்பு துார் வாரிவிட்டு, பிறகு மற்ற மாநிலங்களை பற்றி பேச வேண்டும்.

 

முதல்வர் தமிழக அ.தி.மு.க., அரசை விமர்சிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதியுடன், முதல்வரை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.

 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon