Menu

September 19, 2018
Pondy 21:54 PM +27°C

புதுச்சேரியில் பலரையும் கவர்ந்து வரும் ஸ்கூபா டைவிங்

புதுச்சேரியில் புதிதாக ஸ்கூபா டைவிங் எனும் கடலில் மூழ்கி நீந்தும் பொழுதுபோக்கு விளையாட்டு அறிமுகமாகி பலரையும் கவர்ந்திழுக்கிறது.

 

சுற்றுலாவிற்கு பெயர்பெற்ற புதுச்சேரிக்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பலர் ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா வருவது வழக்கம்.

 

சுற்றுலாப் பயணிகளைக் கவர கடற்கரை சாலை, பேரடைஸ் பீச், சுண்ணாம்பாறு படகு குழாம், ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம், படகு சவாரி, பிரெஞ்சு காலத்திய கட்டிடங்கள் என அழகான, அமைதியான, அற்புதமான இடங்கள் உள்ளன.

 

புதுச்சேரியின் மற்றொரு சிறப்பம்சமாக, ஸ்கூபா டைவிங் எனும் கடலில் மூழ்கி நீந்தும் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. கடற்கரை அருகிலேயே தனியார் நிறுவனத்தின் சார்பில் ‘ஸ்கூபா டைவிங்’ கற்றுக்கொடுக்கப்படுகிறது.

 

இதன் மூலம் கடலுக்கு அடியில் வாழும் அரியவகை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளை காணலாம்.

ஒரு நாள் பயிற்சியுடன் சுற்றுலாப் பயணிகளை ஆழ்கடலுக்கு அழைத்துச் செல்லும் பயிற்சியாளர்கள், அவர்களை ஆனந்தப்படுத்துவதற்காக கடலுக்கு அடியில் பழைய ஜீப், கார்கள் , இரும்பு ராடுகள், தேங்காய் மட்டைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வடிவமைத்து உள்ளனர்.

 

அவைகளில் பாசி படர்ந்த பிறகு பல கடல்வாழ் உயிரினங்கள் அவற்றில் வந்து தங்குகின்றன. ஆழ்கடல் சென்றால் சிறிய வகை மீன்கள் மட்டுமல்லாமல் சுறா வகை மீன்களையும் அருகிலேயே பார்க்கமுடியும் என்றும் , நேரில் பார்க்க முடியாத பலவகையான அரியவகை மீன்களை பார்க்கமுடியும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon