Menu

November 18, 2018
Pondy 09:31 AM +28°C

காரைக்கால் கலெக்டர் ஆடிய தப்பாட்டம் – கலகலப்பானது தேனீர் விருந்து

காரைக்கால் சுதந்திரதின தேனீர் விருந்தில், கலெக்டர் கேசவன், சீனியர் எஸ்.பி.,ராகுல் அல்வால் ஆகியோர் தப்படித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

 

காரைக்காலில், நேற்று முன்தினம், கடற்கரைச்சாலை சீகல்ஸ் உணவகம் எதிரில் 72வது சுதந்திர தின விழா நடந்தது.

 

அமைச்சர் கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாலையில் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், அரசினர் மாளிகையில், தேனீர் விருந்து நடந்தது. அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினர்.

 

கலெக்டர் கேசவன், சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால், எஸ்.பி.,க்கள் மாரிமுத்து, வம்சிதர ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசபத்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.

 

கலை பண்பாட்டுத் துறை சார்பில், தப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 

பின்னர், கலைஞர்கள் வைத்திருந்த தப்பை எடுத்து, கலெக்டர் கேசவன், சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் ஆகியோர் வாசித்தனர். அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர். இதனால், தேனீர் விருந்து கலகலப்பானது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon