Menu

September 19, 2018
Pondy 22:08 PM +27°C

தனியார் நிதி நிறுவன ஊழியர் தாக்குதல் – போலீஸ் வலைவீச்சு

தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் மனோஜ் வசந்த். இவர் கருவடிக்குப்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் இரண்டு மோட்டார் பைக்குகள் வாங்கியுள்ளார்.

 

ஒரு பைக்கிற்கான கடனை செலுத்திய மனோஜ் வசந்த், மற்றொரு பைக்கிற்கான கடனை முறையாக செலுத்தவில்லை.

 

இதனிடையே, மனோஜ் வசந்த், கடன் செலுத்திய பைக்கிற்கு என்.ஓ.சி., கேட்டதற்கு, நிதி நிறுவனம் தரப்பில், மற்றொரு பைக்கின் கடனை முடித்தால் தான் தர முடியும் என கூறி உள்ளனர்.

அந்த நிறுவனத்தில் கடன் வசூல் பிரிவில் பணிபுரியும் முரளிபாஸ், 25, என்பவர் கடன் தொகை வசூலிக்க நேற்று முன்தினம் லாஸ்பேட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

 

அங்கு அவரை பார்த்த மனோஜ் வசந்த், என்.ஓ.சி., கேட்டுள்ளார். அதற்கு, முரளிபாஸ் இது குறித்து நீங்கள் நிதி நிறுவன அதிகாரிகளிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

 

இதில், ஆத்திரமடைந்த மனோஜ்வசந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து, முரளிபாஸை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

 

இது குறித்து முரளிபாஸ் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மனோஜ் வசந்த் உட்பட நால்வரை தேடி வருகின்றனர்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon