Menu

November 18, 2018
Pondy 08:55 AM +28°C

கடலில் சிக்கிய அதிகாரியை மீட்ட காப்பாளர்களுக்கு பாராட்டு

கடல் அலையில் சிக்கிய, விமானப்படை அதிகாரியை மீட்ட, உயிர் காப்பாளர்களை, தெற்கு போலீஸ் எஸ்.பி., அப்துல் ரகீம் பாராட்டினார்.

 

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுகார் மேத் பாண்டே, 35; சென்னை ஆவடியில் உள்ள இந்திய விமானப்படையில் சீனியர்மேன் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.

 

இவர், தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளார். புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த இவர்கள்,

 

அரியாங்குப்பம் அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினத்திற்கு சென்று கடலில் குளித்துள்ளனர்.

 

அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கி சுகார் மேத் பாண்டே கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, சுற்றுலா துறையின் உயிர் காப்பாளர்கள் கடலில் நீந்தி சென்று,

சுகர் மேத் பாண்டேவை பத்திரமாக கரைக்கு கொண்டு வந்து, மயங்கிய நிலையில் இருந்த அவருக்கு முதலுதவி அளித்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கடல் அலையில் சிக்கியவரை பத்திரமாக மீட்ட, வீராம்பட்டினத்தை சேர்ந்த உயிர் காப்பாளர்கள்

 

ஆனஸ்ட்ராஜ், தினேஷ், இந்திரன் கார்த்தி, சின்ன வீராம்பட்டினம் கருணாகரன் ஆகியோரை, தெற்கு எஸ்.பி., அப்துல் ரகீம், சால்வை அணிவித்து பாராட்டினார். அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon