Menu

புதுச்சேரியில் குடற்புழு நீக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாத்திரை விநியோகம்

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகிக்கப்பட்டது.

 

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம், குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம், சாரம் எஸ்.ஆர் சுப்பிரமணியன் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

ஹோமியோபதி மருத்துவ அதிகாரி உஸஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஹோமியோபதி மருத்துவ அதிகாரி உஸஸ் குடற்புழு மாத்திரையை மாணவர்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில் ‘ஒன்று முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு குடற்புழு அகற்றுதல் இத்திட்டத்தின் குறிக்கோளாகும்.

ஆண்டிற்கு இரண்டு முறை தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இத்திட்டத்தினை, கல்வித்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை நலவழித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன.

 

குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதால், ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு வருவது தடுக்கப்படுகிறது’ என்றார்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.

 

தொடர்ந்து புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் பயிலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

 

இதுதவிர தொழில்நுட்ப கல்வி கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் குடற்புழு மாத்திரை வழங்கப்பட்டது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply