Menu

December 14, 2018
Pondy 11:12 AM +29°C

கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்வதாக, முதல்வர் நாராயணசாமி உறுதி

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தேவையான உதவிகள் செய்வதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதியளித்தார்.

 

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

 

26 பேர் வரை பலியாகி உள்ளனர். இக்கன மழையால் கேரளாவில் உள்ள இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

 

பல மாநில முதல்வர்களும் கேரள அரசுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று கேரளா மாநில முதலமைச்சர் பிணராய் விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

 

அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்ததுடன், கேரளா மாநில மக்களின் துயரத்தில் புதுச்சேரி மக்களும் பங்கு எடுத்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

 

அதனைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்திற்குள் வரும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட மாகி பிராந்திய பகுதியில் மழை பாதிப்புகள்

 

ஏதேனும் இருந்தால், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon