Menu

December 14, 2018
Pondy 11:25 AM +29°C

புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் தள்ளி வைப்பு

கருணாநிதி மறைவினால், புதுச்சேரியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது.

 

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் மூலம் இளையராஜா, கடந்த 2013ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடத்தப்படவில்லை.

 

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தலை கட்சி தலைமை அறிவித்தது. இதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.

 

இதில் 1.75 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் வரும் 11, 12, 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 

மாநில, மாவட்ட, வட்டார தலைவர்களுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்து முடிந்துள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையும் முடிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவுக்கு, ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 

இந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்பதால், ஒரு வாரம் தேர்தல் தள்ளிவைக்கப்படுகிறது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon