Menu

நாள்தோறும் நெரிசலில் சிக்கி தவிக்கும் சுய்ப்ரேன் வீதி

புதுச்சேரியில் நாள்தோறும் நெரிசலில் சிக்கி தவிக்கும் சுய்ப்ரேன் வீதியில் வாகனங்ளை செலுத்த முடியாமல், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனர்.

 

புதுச்சேரியில் முக்கிய இடமாக திகழும் ஒயிட் டவுன் சுய்ப்ரேன் வீதியில், ஸ்டேட் பாங்க், உள்ளாட்சிதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

 

இந்த அலுவலகங்களுக்கு வருபவர்கள் வாகனங்களை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துநிறுத்துகின்றனர்.

 

இது மட்டுமின்றி சுய்ப்ரேன் வீதியை சுற்றியுள்ள சூர்கூப் வீதி, எவேஷே வீதியிலும் இதேநிலையில் தான் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

 

போதாக்குறைக்கு சாலையை ஆக்கிரமித்து உடல் எடை குறைப்பு டானிக், குடிநீர் சுத்திகரிப்பு மெஷின், சிம்கார்டு விற்பனையாளர்கள் குடை விரித்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், 25 அடி சாலை 10 அடி சாலையாக குறுகி உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும் அளவிற்குதான் வழி கிடைக்கிறது.

 

ஒயிட் டவுனை சுற்றிப்பார்ப்பதற்கு இந்த வீதி வழியாக காரில் வந்து, நெரிசலில்சிக்கிகொள்ளும் சுற்றுலா பயணிகள் இந்த பகுதியை கடப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது.

 

அருகில் உள்ள ரோமன் ரோலண்ட் வீதி,அதற்கு அடுத்து உள்ள துாய்மா வீதியில் கூட ஒருபுறமாக தான் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

 

ஆனால் சுய்ப்ரேன் வீதியில் இருபுறமாகவாகனங்கள் நிறுத்தப்படுவதை போலீசார் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply