Menu

November 18, 2018
Pondy 09:09 AM +28°C

மீண்டும் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு; மருத்துவமனையில் பரபரப்பு !

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவால் கடந்த 2016 ம் ஆண்டு, முதல்முறையாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாலும், நுரையீரலில் சளி அதிகம் இருந்ததாலும் அப்போது அவருக்கு `ட்ரக்கியோஸ்டோமி’ (தொண்டைக்குழி அறுவை சிகிச்சை) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலிருந்து வருகிறார் கருணாநிதி. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டில் இருந்தபடியே உடல் நலக்குறைவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 18 ம் தேதி உடல் நிலைப் பரிசோதனை மற்றும் ட்ரக்கியோடோமி கருவியை மாற்றுவதற்கும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. அதன் பின்னர், வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்த அவரது உடல் நிலையில் திடீர் சோர்வு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், கோபாலபுரம் வீட்டுக்கே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்றானதால் மீண்டும், கருணாநிதியைக் காவேரி மருத்துவமனைக்கே அழைத்துச் செல்ல முடிவு எடுத்தனர்.

இதற்கிடையில், பிற மாநில முதல்வர்கள் உட்பட பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்துச் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து சென்றார். கருணாநிதிக்குக் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதற்காகத் தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கஜா நிவாரண பொருட்களில் ரஜினி புகைப்பட ஸ்டிக்கர் !!

கஜா புயலின் கோர தாண்டவத்தில் நாகை, கடலூர்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon