Menu

September 19, 2018
Pondy 22:01 PM +27°C

பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி தொடக்கிவைத்தார் அமைச்சர் மு.கந்தசாமி

பெண்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.

புதுவை மகளிர் – மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக் கழகம் சார்பில், பொருளாதர நிலையில் பின்தங்கிய மகளிரின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அனைத்து மகளிரும் பயன்பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பல்வேறு பயனுள்ள தொழில் பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

அந்த வகையில் புதிதாக மகளிருக்கான ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா புதுச்சேரி நடேசன் நகரில் உள்ள கழக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியைக் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாக இயக்குநர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கந்தசாமசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆண்கள் ஓட்டும் ஆட்டோக்களில் பெண்கள் பயணிக்க அச்சப்படுகின்றனர். அதே நேரத்தில், வேலையில்லா பெண்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொடுத்து பயணிகள் ஆட்டோ ஓட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கால் டாக்ஸியில் பணியாற்ற கார் ஓட்டுவதற்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அமைச்சர் கந்தசாமி.

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon